புதுப் பொலிவோடு உருவாகியுள்ள “உப்பு புளி மிளகா”

புதுப் பொலிவோடு உருவாகியுள்ள “உப்பு புளி மிளகா”
Uppu Puli Milaga cooking show portray an educational component

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் அறுசுவை உணவு நிகழ்ச்சி "உப்பு புளி மிளகா". புத்தம் புதிய  பொலிவோடு மூன்று பகுதிகளாக இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மனசுக்கு பிடித்தார் போல் உருவாக்கப்பட்டுள்ளது. 

முதல் பகுதி கைப்பக்குவமும் தேர்ந்த சமையல் அனுபவம் கொண்ட இல்லத்தரசிகளின் சமையல். இது அவரவர் இல்லத்திற்கே சென்று அவர்களது சமையல் அறையில் அவர்களின் சமையல் முறையை படமாக்குவது தனி சிறப்பு. 

இரண்டாவது பகுதி : பிரபல சமையல் நிபுணர் செஃப் வித்யா தான் கற்றவைகளை நேயர்களுக்கு விளக்கி விதவிதமான உணவுகளை சமைத்து காட்டுவது நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு. 

மூன்றாவது பகுதி நேயர்கள் பயனடையும் வகையில் சமையல் கலையில் தேர்ச்சி பெற்ற பெண்மணி பார்வையாளர்களுக்கு சமையல் டிப்ஸ்கள் வழங்குவது அடுத்த சிறப்பு. 

மேலும்  திருமதி . கீதா குமாரியின்  முந்தைய உணவு கலாச்சாரம் மற்றும் மருத்துவ நோக்கம் கொண்ட பாட்டி வைத்தியம் போன்ற நிகழ்ச்சிகளை இல்லத்தரசிகள் பார்த்து கற்றுக் கொள்வதோடு அதை தங்கள் இல்லங்களில் சமைத்து மகிழ்வதால், இல்லத்தரசிகளின் பேராதரவு " உப்பு புளி மிளகா" நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது. 

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் செபாஸ்டியன் .

Uppu Puli Milaga cooking show portray an educational component