நாடாளுமன்ற தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன், திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேனி (33) நாடாளுமன்றத் தொகுதி: டிடிவி தினகரன், கழக பொதுச்செயலாளர்

திருச்சி (24) நாடாளுமன்றத் தொகுதி: செந்தில்நாதன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்” என அறிவித்துள்ளார்.