தண்ணீர் சப்ளை சீராக்க ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவு

தண்ணீர் சப்ளை சீராக்க ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவு
தண்ணீர் சப்ளை சீராக்க ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவு

புதுடில்லி: டில்லியில் வறட்சி நிலவும் பகுதிகளில் தண்ணீர் சப்ளை அதிகரிக்க டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தற்போ நம்பர் டூவாக இருக்கும் அமைச்சர் அதீசி இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் கெஜ்ரிவால் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலையுடன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். தண்ணீருக்கு சிரமப்படும் பகுதிகளில் தண்ணீர் டேங்கர் லாரியை அதிகரிக்க கேட்டுள்ளார். இதனை நடைமுறைப்படுத்துவோம். சிறையில் இருக்கும் இப்படி துயரமான நேரத்திலும் முதல்வர் மக்கள் மீது வைத்துள்ள அக்கறையை நினைக்கும் போது எனக்கு கண் கலங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமலாக்க துறை கைது செய்து கஸ்டடியில் இருக்கும் போது அவர் முதல்வராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முதல்வர் அரசு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.