ஐபிஎல்லில் இன்று 2 போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ மும்பை-குஜராத் மோதல்

ஐபிஎல்லில் இன்று 2 போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ மும்பை-குஜராத் மோதல்
ஐபிஎல்லில் இன்று 2 போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ மும்பை-குஜராத் மோதல்

ஜெய்ப்பூர்:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், ஹெட்மயர், ரோவ்மன் பவல், அஷ்வின், போல்ட், அவேஷ் கான், சாஹல் என சிறந்தவீரர்கள் உள்ளனர்.

ராகுல் தலைமையிலான லக்னோ அணியில், டிகாக், நிகோலஸ் பூரன், ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஷமர் ஜோசப் வலு சேர்க்கின்றனர். இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியதில் ராஜஸ்தான் 2, லக்னோ 1ல் வென்றுள்ளன. இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 2 சீசனில் குஜராத்தை வழிநடத்திய பாண்டியா, அந்த அணிக்கு எதிராக இன்று களம் இறங்குகிறார். மேலும் ரோகித்சர்மா அவருக்கு கீழ் விளையாட உள்ளார். குஜராத் புது கேப்டன் கில் தலைமையில் களம் காண்கிறது. வில்லியம்சன், டேவிட் மில்லர், சாய்சுதர்சன் பவுலிங்கில் சாய்கிஷோர், ரஷித்கான் கவனம் பெறுகின்றனர். இரு அணிகளும் 4 முறை மோதியதில் தலா 2ல் வென்றுள்ளன.