வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு
வெங்காய ஏற்றுமதி மீதான தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், வெங்காய ஏற்றுமதி மீதான தடை மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று அறிவித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கான தடை கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதியிலிருந்து நீடித்து வருகிறது. நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு வெங்காயம் வழங்கி வருகிறது.