தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் கரோனா பாதிப்பு குறைந்து இன்று 1,203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இன்று புதிதாக கரோனா பாதித்த 3,616 பேருடன் சேர்த்து தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மாநிலத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 65 பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,551 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 65 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. இதில் 71,116 பேர் குணமடைந்துவிட்டனர்.தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1,747 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 36,938 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 14,13,435 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.