இந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்

இந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்

இந்திய அணி வீரர் எம்எஸ் தோனி, தனது 39-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். பிசிசிஐயும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தோனியின் அதிரடி சிக்ஸர்களின் விடியோக்களை வெளியிட்டுள்ளன. தோனி ஆஸ்திரேலியாவில் அடித்த சிக்ஸர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.