மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்

சென்னை விமான நிலையத்தில் நேற்று மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தியா முழுவதும் ஏராளமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்பக புற்றுநோய் தொடர்பாக ஹோப் மற்றும் இந்திய டர்ன்ஸ் பிங்க் ஆகிய அமைப்புகள் சார்பாக சென்னை விமான நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஹோப் நிறுவனர் சரவணன், இந்திய டர்ன்ஸ் பிங்க் நிறுவனர் அனந்தகுமார் ஆகியோர் தலை தாங்கினர். இதில், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.அத்துடன், 'மைம் நாடகமும்' காட்சிப்படுத்தப்பட்டது. மார்பக புற்றுநோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் சாய் தினா, அசார்த், அஷ்வந்த் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், 200க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்துகொண்டனர்.