லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த இந்திய பிஎச்டி மாணவி விபத்தில் பலி

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த இந்திய பிஎச்டி மாணவி விபத்தில் பலி
லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த இந்திய பிஎச்டி மாணவி விபத்தில் பலி: குப்பை லாரி மோதியதால் சோகம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில், அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த மாணவி ெசஸ்தா கோச்சார் (35) என்பவர், பிஎச்டி படிப்பு படித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான அவரது கணவர் பிரசாந்த், அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் தனது பைக்கில் முன்னால் சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் சைக்கிளில் செஸ்தா கோச்சார் சென்றார்.

அப்போது குப்பை ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று, செஸ்தா கோச்சார் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செஸ்தா கோச்சாரை, அவரது கணவரும் அங்குள்ள சிலரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செஸ்தா கோச்சார் பலியானார். தகவலறிந்த செஸ்தா கோச்சாரின் தந்தையும், முன்னாளர் ராணுவ தளபதியுமான டாக்டர் எஸ்பி கோச்சார் மற்றும் அவரது மூத்த சகோதரர் ராகவ் ஆகியோர் இங்கிலாந்துக்கு விரைந்துள்ளனர்.