ராஜஸ்தான் அணி 20 ரன்களில் வெற்றி

ராஜஸ்தான் அணி 20 ரன்களில் வெற்றி
ராஜஸ்தான் அணி 20 ரன்களில் வெற்றி

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரின் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்களில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., தொடரின் இன்றைய முதலாவது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. இப்போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24, ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டாகினர். ரயான் பராக் 43 ரன்கள் எடுத்தார். அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 82 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
194 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து 2-0 ரன்களில் தோல்வியடைந்தது. லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 64 ரன்களும் கே.எல்.ராகுல் 58 ரன்களும் சேர்த்தனர். தீபக் ஹூடா 26 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. பந்துவீச்சில் டிரன்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ரன்களில் வெற்றி பெற்றது.