திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு

மாஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாஜி எம்பி மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம், கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹூவா மீண்டும் களமிறங்கியுள்ளார்.

மஹூவா மீதான விசாரணை லோக்பால் அமைப்பில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது மஹூவா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தது. இந்த சூழலில், மஹூவாவின் வீட்டில் நேற்று சிபிஐ அதிடி சோதனை நடத்தினர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.