இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாக்., பரிசீலனை

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாக்., பரிசீலனை
இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாக்., பரிசீலனை

இந்தியா உடன் வர்த்தக உறவை மீண்டும் துவங்குவது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர் மற்றும் லடாக் என இரு மாநிலங்களாக பிரித்தது. இதனையடுத்து இந்தியா உடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்தது.
இந்நிலையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறுகையில், இந்தியா உடன் வர்த்தக உறவை துவக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வர்த்தகர்கள் விரும்புகின்றனர். எனவே, இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் துவக்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.