கடத்தல் காரர்களால் ராமேஸ்வரம், மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்பு: இந்திய கடலோர காவல்படை அசத்தல்

ராமநாதபுரம்: கடத்தல் காரர்களால் ராமேஸ்வரம், மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்டன. கடலோர காவல் படையினர் பைபர் படகில் சோதனையிட்டபோது கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடலில் வீசியதாக தகவல் வெளியானது. நடுக்கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை, நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் உதவியுடன் 2-வது நாளாக தேடப்பட்டது. 2-வது நாளாக காலையில் இருந்து இரவு வரை கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணி நடந்தது. இரவு வரை நடந்த தேடும் பணியில் தங்கக் கட்டிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட கடலோர காவல் படையினர் முடிவு செய்தனர்.

அதன்படி, நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கக் கட்டிகள் இருந்த பார்சலை இந்திய கடற்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் இந்திய கடலோர காவல்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே தங்கத்தின் மதிப்பு குறித்து தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது. கடத்தல் விவகாரம் குறித்து வேதாளையை சேர்ந்த சாதிக் அலி என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.