தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு!
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்றைய பாதிப்பு நிலவரம்:
கடலூர் -122, விழுப்புரம் - 49, பெரம்பலூர் -25, திருவண்ணாமலை - 11, திண்டுக்கல் - 10 பேர் பாதிப்பு.
கடலூரில் மாவட்டத்தில் இன்று பிறந்த குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு; கடலூரில் இன்று ஒரே நாளில் 122 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 266 பேர் பாதிப்பு; இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் 1,409 பேர் குணமடைந்தனர்.கொரோனா தாக்கத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கோயம்பேடு.கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு