கழிவறை இல்லாத 20 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தம்

கழிவறை இல்லாத 20 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தம்

புவனேஸ்வர்:ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கவுதமி என்ற கிராமம் உள்ளது. பஞ்சாயத்து சார்பில் அந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 11 நாட்களில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்திய 20 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.