ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி

ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஐதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தியது. இதில் தோனிக்கு இரண்டு பந்துகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில் 5 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஐபிஎல் உலகில் வேறு யாருமே செய்யாத சாதனையை தோனி படைத்தார். ஐபிஎல் தொடரில் 150 வெற்றிகளில் பங்கெடுத்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (133 வெற்றிகள்), ரவீந்திர ஜடேஜா (133 வெற்றிகள்) உள்ளனர்.