மழையால் ஏற்பட்ட விபரீதம்: கேரளாவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற பெண் நோயாளி உயிரிழப்பு!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த அவசர ஊர்தி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் கொண்டு சொல்லப்பட்ட நோயாளி உயிரிழந்தார். கோழிக்கூடு மாவட்டம் நாதாபுரம் பகுதியில் இருந்து மழைக்கு இடையே சுலோசனா என்ற பெண் நோயாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவ அவசர ஊர்தி தனியார் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு இருந்தது. நள்ளிரவில் சுமார் 2 மணி அளவில் கோழிக்கூடு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அவசர ஊர்தி சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அவசர ஊர்தியில் பயணித்த நோயாளி சுலோசனா உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொருவருக்கு கோழிக்கூடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கனமழை காரணமாகவே அவசர மருத்துவ ஊர்தி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளதாக கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.