"கை மணம்"

"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"
"கை மணம்"

"கை மணம்"

மண்மணம் மாறாத "கை மணம்" ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பல பழமை மாறா உணவுப் பண்டங்களை  புதுமையான முறையில் செய்து அசத்துகிறார் செஃப் சரவணன்,சிக்கன் பொரியல், நாவல் பழ கறி, இளநீர் சிக்கன், கதம்ப மீன் குழம்பு போன்ற பல வித்தியாசமான  அசைவ உணவு வகைகளை எளிமையான முறையில் விளக்கங்களுடன், சில சுவாரஸ்யமான குறிப்புகளுடன் வழங்கி வருகிறார் செஃப் சரவணன்.

தனது அனுபவங்களை புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடனும் , சுவாரஸ்யமாகவும் வழங்கி வருகிறார் சமையல் கலை வல்லுநர் சரவணன் . சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் ,வயிற்றுக்கும் விருந்தாக  அமைந்துள்ள இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .