வள்ளியம்மை பொறியியல் கல்லூரி ஆண்டு விழா -2019

வள்ளியம்மை பொறியியல் கல்லூரி ஆண்டு விழா -2019

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா -2019"  01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட நடிகர் திரு. சதீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர்தனது விழா பேருரையில் மாணவர்கள் ஒரு பிரகாசமான மற்றும் வளமான வாழ்க்கையை இலக்காக கொண்டு முன்னேற வேண்டும் என்றும் மேலும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதின் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை வளர்ப்பதற்கான ஓர் தளம் உருவாகும் என்று அதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். 

இவ்விழாவில் 'டூலெட்' திரைப்படத்தின் இயக்குனர் திரு. செழியன் அவர்களும் கலந்து கொண்டு தன் திரைப்படத்தில் பெற்ற அனுபவத்தையும் அத்திரைப்படம் வாங்கிய விருது களையும் பற்றி எடுத்துரைத்தார்.  

மேலும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறு வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துக்கிக் கொள்ளவேண்டும் என்பதனையும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். பா. சிதம்பரராஜன் அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.  கல்லூரியின் இயக்குனர் முனைவர். தி. பொ. கணேசன் அவர்கள் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். ம. முருகன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.