சென்னை சில்க்ஸ்: கட்டிட இடிப்பின் போது ஒருவர் பலி

சென்னை: சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள "சென்னை சில்க்ஸ்" கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்ததால். அந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது.
அதன் படி, அந்த கட்டிடத்தை தனியார் நிறுவனம் மூலம் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கட்டிட இடுப்பு பணியின் போது ஜா கட்டர் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. அதனை சரி செய்வதற்காக சென்ற ஊழியர்கள் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்துள்ளது. இதில், ஜா கட்டர் இயந்திர டிரைவரின் உதவியாளர் சரத் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.