பிரசாதம் கேட்டதற்கு அடி உதை... அலறிய முதியவர்..

பிரசாதம் கேட்டதற்கு அடி உதை... அலறிய முதியவர்..
பிரசாதம் கேட்டதற்கு அடி உதை... அலறிய முதியவர்..
பிரசாதம் கேட்டதற்கு அடி உதை... அலறிய முதியவர்..

பிரசாதம் கேட்டதற்கு அடி உதை... அலறிய முதியவர்..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடையே மோதல்

சிதம்பரம்: நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடையே ஏற்படும் மோதல் தொடர்கதையாகி வருகிறது. லட்சார்ச்சனை பிரசாதம் வாங்கச் சென்ற வயதான தீட்சிதர் ஒருவரை சக தீட்சிதர் அடித்து கீழே தள்ளியதாக புகார் எழுந்துள்ளது.

தாக்கப்பட்ட வயதான தீட்சிதரின் பெயர் கிருஷ்ணசாமி என்பதாகும். இவரது வயது 62. ஐயோ வலிக்குதே... அடித்து விட்டார்களே... பிரசாதம்தானே கேட்டேன்... அதற்கு அடித்து விட்டார்களே என்று மருத்துவமனை வாசலிலும் படுக்கையிலும் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் அந்த வயதானவர்.

நடந்த சம்பவம் பற்றி பேட்டியளித்த அவர், நடராஜருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. தயிர்சாதம் பிரசாதம் நைவேத்தியம் செய்யப்பட்டது. அந்த பிரசாதத்தை வாங்க போன போது பைத்தியம் வெளியே போ என்று கூறி தள்ளி விட்டனர் என்று சொன்னார் கிருஷ்ணசாமி.

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பிரச்சினை
நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த விஷயத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.

தீட்சிதர் மீது தாக்குதல் 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திகணேஷ் தீட்சிதர் என்பவரை ஒரு தரப்பு தீட்சிதர்கள் தாக்கியதாக சிதம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு கோயிலுக்கு வழிபட வந்த ஜெயசீலா என்ற பெண்ணை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரில் ஜெயசீலா பின்னணியில் ஒரு தரப்பு தீட்சிதர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேற்று இரவு தீட்சிதர் ஒருவரை சக தீட்சிதர்கள் தாக்கியதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது.

வாக்குவாதம் 
தற்போதைய கோவில் செயலாளர் ராஜகணேசன் தீட்சிதர் என்பவருடைய தம்பி ரவிசெல்வன் தீட்சிதர்தான் புகாருக்கு ஆளானவர். அவர்தான் கிருஷ்ணசாமி தீட்சிதரிடம் உனக்கு பிரசாதம் தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரவி செல்வம் தீட்சிதர் கிருஷ்ணசாமி தீட்சிதரை கையால் அடித்து நெட்டி தள்ளி உதைத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி 
அடிபட்டுள்ளது நான் வர மாட்டேன் என்று அழுது புரண்டார் கிருஷ்ணசாமி,இதனையடுத்து வலி தாங்க முடியாத கிருஷ்ணசாமி தீட்சிதர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.

அடம் பிடித்த கிருஷ்ணசாமி 
அதற்குள் கிருஷ்ணசாமியின் மகள் உள்நோயாளியாக மருத்துவமனையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன் இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஆட்டோவில் ஏற மறுத்து கிருஷ்ணசாமி தீட்சிதர் கீழே உருண்டு விழுந்து அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.