7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்

7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது என்று ரஜினிகாந்த் கூறினார், இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. 

பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. என்று ரஜினிகாந்த் கூறினார்.