ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் கடந்த 24-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க இந்தியர் ஒருவர் பலியானார். ஐ.நா. வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த அனில் ராஜ் என்ற இந்தியர் பலியானார். ஐ.நா. ஊழியர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அனில் ராஜின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.