பயன் அடையப் போவது தி.மு.க தான்: தினகரன்

பயன் அடையப் போவது தி.மு.க தான்: தினகரன்
DMK party will get benefit says Dinakaran

சென்னை: சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக நேற்று அ.தி.மு.கவின் அமைச்சர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:

அச்சத்தின் காரணமாக சிலர் எடுத்த முடிவுக்கு வருத்தப்படவில்லை. எந்த காரணத்தை கொண்டும் கட்சி பிளவு படக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதால் நன்மை நடப்பதாக இருந்தால் நடக்கட்டும்.

கட்சியில் இருந்து நேற்றே நான் ஒதுங்கி விட்டேன். என் பலத்தை காண்பிக்க வேண்டும். சண்டை போடவேண்டும், என்ற எண்ணம் எனக்கு இல்லை. கூட்டமோ, போட்டி கூட்டமோ நடத்தி கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. என்னால் கட்சியோ, ஆட்சியோ பலவீனப்படுவதை விரும்பவில்லை.

யாருடைய மிரட்டலுக்கும் பயப்படாமல் தைரியத்துடன் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். அ.தி.மு.க.வின் அழிவால் நேரடியாக பலன் அடையப் போவது தி.மு.க தான். எனவே அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் ஆட்சி நடத்த வேண்டும்.

என்னை துணை பொதுச்செயலாளராக சசிகலா தான் நியமித்தார். அவரை சந்தித்த பின்பு ராஜினாமா பற்றி முடிவு எடுப்பேன்.

எனது பாஸ்போர்ட் 16 ஆண்டுகளுக்கு முன்பே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இனி எப்படி நான் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடியும்.

எனது சிங்கப்பூர் குடியுரிமை ஏற்கனவே காலாவதியாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

DMK party will get benefit says Dinakaran