ரோபோட்டை திருமணம் செய்து கொண்ட வாலிபர்

ரோபோட்டை திருமணம் செய்து கொண்ட வாலிபர்
Chinese man marries robot built by himself

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் உருவாக்கிய ரோபோட்டை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த ரோபோட் என்ஜினீயரான செங் ஜியா ஜியா(31) கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.

இந்நிலையில், செங் ஜியா ஜியா திருமணத்துக்காக தன் வீட்டில் உள்ளவர்கள் பெண் தேடி வந்தனர், ஆனால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு காங்சுகு என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்ல முடியும். ஆனாலும், திருமண வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட ரோபோட்டில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக செங் ஜியா ஜியா கூறினார்.

Chinese man marries robot built by himself