சென்னையில் ஓர் மகிழ்ச்சி கொண்டாட்டம்
சென்னையில் ஓர் மகிழ்ச்சி கொண்டாட்டம்
JOY TO THE WORLD
கொரோனா பேரிடர்களில் பல இன்னல்களை மற்றும் தடைகளை தாண்டி மீண்டும் உற்சாகமாக களத்தில் இறங்கிய சத்தியம் தொலைக்காட்சி .தனது பணியை செவ்வனே செய்து வந்தது.
இதன் தொடச்சியாக சென்னையில் ஓர் மகிழ்ச்சி கொண்டாட்டம் . JOY TO THE WORLD காண்பவர்களின் மனதைத் தொடும் கலைநிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் துள்ளலான நடனங்களும் சகோதரர் மோகன் சி,லாசரஸ் அவர்களின் சிறப்பு நற்செய்தி, சகோதரர் ஜெர்சன் எடின்பரோ அவர்களின் துதி ஆராதனைகள் மற்றும் போதகர் லூகாஸ் சேகர் சகோதரர் பென்னி ஜோஷ்வா போதகர் டேவிட் விஜயகாந்த் சகோதரர் தியோபிலஸ் அவர்களின் சிறப்பு பாடல்களுடன் கூடிய இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தேறியது.
மேலும் பல கொண்டாட்ட மயமான இசை, நடனம். சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் இணைந்த அற்புதமான மாலைப் பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் மிக மிக பிரமாண்டமாய் டிசம்பர் 18 ஆம் தேதி நேரலையாக உங்கள் அபிமான சத்தியம் தொலைக்காட்சியில் அரங்கேறி முடிந்தது ..நேயர்களின் விருப்பத்தின் பேரில் இந் நிகழ்ச்சியை மீண்டும் இயேசு உதித்த தினமான கிறிஸ்துமஸ் அன்று மாலை 6:00 முதல் இரவு 9.00 மணி வரை ஒளிபரப்படுகிறது .சத்தியம் தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் இந் நிகழ்ச்சியை காண முடியும் மகிழ்ச்சி பொங்கும் திருவிழாவை காணமறவாதீர்கள்.