சோனி லிவ் - 2000 மணி நேர தரமான தமிழ் நிகழ்ச்சிகள்

சோனி லிவ் - 2000 மணி நேர தரமான தமிழ் நிகழ்ச்சிகள்

சென்னை: 2019 மே 28 : இந்தியாவின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் (VOD) தளமான சோனி லிவ் தனது நேயர்களுக்கு உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கத் தமிழில் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.  சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, பிசினஸ் ஹெட் - டிஜிடல், உதய் சோதி உடனிருக்கத், தமிழகத்தின் பிரபல முகங்களான கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன் மற்றும் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் இந்த தளத்துடனான தங்களுடைய செயல்பாட்டை அறிவித்தனர். வரும் ஜூன் முதல் ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் சோனி லைவ்-இல் ஒளிபரப்பாக உள்ளன. 

சோனி லைவ்-இல் ‘ஐவர் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக இருப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.  ஹர்ஷா இயக்கத்தில், அஸ்வின் காகாமனு மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தாத்தாவின் பத்திரிக்கையை ஒரு வர்த்தகர் மீட்டெடுக்கும் போராட்டம் பற்றியதாகும். சோனி லைவ்-இல் ஏற்கனவே 85 ஒரிஜினல்கள் உள்ள நிலையில் ‘ஐவர்’ ஜூனில் ஒளிபரப்பாகும்.

சோனி லைவ்-இல் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தி ஃபார்ம் மற்றும் ‘மை மரபு முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டவை. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கின் டாப் 20 நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், பிட்சர்ஸ், டிரிப்ளிங்க் மற்றும் பெர்மனெண்ட் ரூம் மேட்ஸ் உள்ளிட்ட டிவிஎஃப் ஒரிஜினல்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தமிழில் வரவிருக்கின்றன. நெட்வொர்க்கின் பிரபல ஐபி-யையும் சோனி லிவ் தமிழில் மறு ஆக்கம் செய்ய உள்ளது.  நீண்ட காலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றான க்ரைம் பேட்ரோல்,  உள்ளூர் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு டிஜிடல் முறையில் மறு ஆக்கம் செய்யப்படும்.   

சோனி லிவ் நூலகத்தில் தெற்குச் சந்தைகளுக்காக தி குட் டாக்டர், கவுண்டர்பார்ட், விக்டோரியா, தி ஹாண்ட்மெயிட்ஸ் டேல் உள்ளிட்ட பிரபல மற்றும் விருது பெற்ற ஆங்கில நிகழ்ச்சிகள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. கால்பந்தாட்டப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை இனி தமிழ் வர்ணனையுடன் கண்டு மகிழலாம். 

7 நாள்களுக்கான 29 சாஷே பேக்  பிரிமியம் சந்தா மாதம் ரூ 99/- மற்றும் ஆண்டு சந்தா ரூ 499/-இல் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.  தற்போது சோனி லிவ் நூலகத்தில் இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் சமீபமாக நேற்று அறிவித்த தெலுங்கு மொழி சேவைகள் கிடைக்கும்.

இது குறித்து சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, டிஜிடல் பிசினஸ் ஹெட் உதய் சோதி கூறுகையில்முன்னிலை நிறுவனம் என்னும் நிலையில் சோனி லிவ் தனது நுகர்வோருக்குப் பொழுதுபோக்கு அனுபவத்தை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டிய அவசியத்தை  உணர்ந்து எல்லைகளையும், நிகழ்ச்சிகளையும், விரிவுபடுத்தியது. தமிழில் எங்கள் சேவைகளை வழங்குவதிலும், டிஜிடல் இகோசிஸ்டத்தில் எங்கள் பிராண்டை வலுப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்.  தடையற்ற ஸ்ட்ரீமிங்க் அனுபவத்துடன் உள்ளூர் நடிகர்கள் நடிப்பில் கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவோம்’ என்றார் நம்பிக்கையுடன்.