சென்னை கனமழை: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இந்த தேர்வு மற்றொரு நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.