துரைப்பாக்கத்தில் ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை

துரைப்பாக்கத்தில் ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை
Women Techie commits suicide in Chennai Thoraipakkam

சென்னை: சென்னை துரைப்பாக்கம் 200 அடி சாலையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் பிரியங்கா (வயது 24). ஆந்திராவைச் சேர்ந்த இவர் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு அந்த நிறுவனத்தின் 9-வது மாடிக்குச் சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து, துரைப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியங்கா தற்கொலை குறித்து உடனே, ஆந்திராவில் உள்ள அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஐ.டி பெண் ஊழியரின் தற்கொலை ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Women Techie commits suicide in Chennai Thoraipakkam