“வளரும் பயிருக்கு உரமில்லை.!! அறுவடையான நெல் கொள்முதல் இல்லை..!! விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது…??” 

“வளரும் பயிருக்கு உரமில்லை.!! அறுவடையான நெல் கொள்முதல் இல்லை..!! விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது…??” 
“வளரும் பயிருக்கு உரமில்லை.!! அறுவடையான நெல் கொள்முதல் இல்லை..!! விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது…??” 

“வளரும் பயிருக்கு உரமில்லை.!!
அறுவடையான நெல் கொள்முதல் இல்லை..!!
விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது…??” 

இந்த அரசு எப்போதுமில்லாத வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபோது, அது நமது மக்கள் நீதி மய்யம் கட்சியாலும், நமது தலைவர் நம்மவராலும் முழுமனதோடு பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அறியும் தகவல்கள் இதற்கு முரணாகவும், வேதனையூட்டுவதாகவும் இருக்கிறது. 

வயலில் வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு சரியான நேரத்தில் உரமிட வழியில்லாமல் விவசாயிகள் தமிழகமெங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் அறுவடையான நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு ஆர்வம் காட்டாததால் மயிலாடுதுறை பகுதியில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். 

இதைவிடக்கொடுமை தேனி பகுதியில் அரசு கொள்முதல் செய்த  நெல்லை சரியாகப் பாதுகாக்காமல் மழையில்  நனையவிட்டு அது முளைத்துக்கிடக்கும் அவல நிலை!

திமுக அரசு விவசாயிகள் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தும் நோக்கில்தான் வேளாண்மைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்கிறது என்று நாம் நினைத்தால் அது வெறும் ஏட்டுச்சுரைக்காய், கறிக்கு உதவாது என்பது இப்போது தெரிகிறது. 

எனவே ஆளும் திமுக அரசு விவசாயிகள்மீது உண்மையான அக்கறையோடு,  உரத்தட்டுப்பாட்டை நீக்கியும், விளைந்த நெல்லை கொள்முதல் செய்தும் அவர்கள் கண்ணீரை துடைக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


மயில்சாமி,
மாநில செயலாளர் – விவசாயிகள் நல அணி,
மக்கள் நீதி மய்யம்