விவசாயிகளுடன் சத்தியம் நிகழ்ச்சி “உழவன்”

விவசாயிகளுடன் சத்தியம் நிகழ்ச்சி  “உழவன்”
விவசாயிகளுடன் சத்தியம் நிகழ்ச்சி “உழவன்”

விவசாயிகளுடன் சத்தியம் நிகழ்ச்சி

“உழவன்”

விவசாயிகளுக்கு தோள் கொடுக்கவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும் #Friday For Farmers இயக்கத்தை சத்தியம் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டும் வகையில், “உழவன்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இயற்கை விவசாயிகளின் சாதனைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மக்கள் கண்முன் நிறுத்தி வெளிச்சம் போட்டு காட்டுகிறது உழவன் நிகழ்ச்சி. எல்லோராலும் போற்றப்பட வேண்டிய விவசாயிகளை இவ்வுலகம் மறந்தாலும், மக்களுக்காக தரமான, ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து வருகிறார்கள் இயற்கை விவசாயிகள். மண்ணையும், மக்களையும் காப்பாற்றி வரும் இயற்கை விவசாயிகளை தேடிச் சென்று, அவர்களை இவ்வுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது "உழவன்" நிகழ்ச்சி... வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கும், அதன் மறுஒளிபரப்பு மாலை 5.30 மணிக்கும் உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .