ஊர் சமையல்

ஊர் சமையல்
Vaanavil TV new program Oor Samayal

(ஞாயிறு தோறும் மாலை 3:30 மணிக்கு)

வானவில் தொலைக்காட்சியில் "ஊர் சமையல்" என்னும் புதிய சமையல் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

உணவு என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், ஏன் ஒவ்வொரு வீட்டிற்கும் வேறுபடும். இப்படி இருக்கும் உணவு வகைகளை அந்தந்த ஊருக்கே சென்று அந்த ஊரில் உள்ள சிறப்பான உணவு வகைகள் என்னவென்று மட்டுமில்லாமல், செய்முறைகளை விலக்கி மக்களுக்காக சமைத்துக்காட்டும் முற்றிலும் ஒரு மாறுபட்ட அற்புதமான நிகழ்ச்சி.

அப்படி இந்த வாரம் செங்கல்பட்டின் சிறப்பு உணவு வகையாக கருதப்படும் செங்கல்பட்டு ஏரி மீன் குழம்பு உங்கள் "ஊர் சமையல்" நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. ஞாயிறு தோறும் "வானவில் தொலைக்காட்சியில்” மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர் ஸ்ரீதர் ராஜூ.

Vaanavil TV new program Oor Samayal