“உரக்க சொல்வோம் உலகிற்கு”

“உரக்க சொல்வோம் உலகிற்கு”
Urakka Solvom Ulagirkku

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “உரக்க சொல்வோம் உலகிற்கு” நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இது சப்தமில்லாமல் மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிகார துஷ்ப்பிரயோகங்களையும், இயற்க்கை வளங்களையும் கொள்ளையிடும் அதிகாரிகள் முதல் அடிமட்ட வர்க்கத்தினர் செய்யும் குற்றங்கள் வரை மக்கள் போராடி கிடைக்காத நியாயத்தையும், அரசாங்கத்திற்கும், சட்டத்திற்கும் மக்களோடு மக்களாய் இணைந்து அரசின் கவனத்துக்கு எடுத்து சொல்லும் சிறு முயற்சிதான் இந்த “உரக்க சொல்வோம் உலகிற்கு” நிகழ்ச்சி.

இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு "நீட்" தகுதித் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தளுக்கோ அல்லது துணை ஜனாதிபதி தேர்தளுக்கோ தங்களின் ஆதரவை தெரிவிக்க மத்திய அரசை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் நீட் தேர்வு விவகாரம் கிணற்றில் போடப்பட்ட கல் போல அப்படியே கிடக்கின்றது. தமிழக மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது பற்றி இந்த வார உரக்க சொல்வோம் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள். வரும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில்.

Urakka Solvom Ulagirkku