வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’

வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’
வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’
வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’

வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக 
‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’

சென்னை: 2022 பிப்ரவரி 25 : முன்னணி  தொடர்  மருத்துவமனையான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் தனது 17+ ஆண்டுகள் பாரம்பரிய கல்லீரல் பாதுகாப்பு மருத்துவ அனுபவத்தை, அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’ தொடக்கம் மூலம் சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளது.  டாக்டர் சஞ்சய் பாண்டே மற்றும் டாக்டர் புனீத் தர்கான் ஆகியோர் முன்னிலையில் தெற்கு ஆசியாவின் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் விஜ் இம்மையத்தைத் தொடங்கி வைத்தார்.  இந்தப் பிரத்யேக மையம் விரிவான மற்றும் முழுமையான கல்லீரல் பாதுகாப்பு சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கும். 

ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கல்லீரல் மையம் அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் மருத்துவர்களுடன் 24x7 அணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஜிஐ மேம்பட்ட அறுவை சிகிச்சை, ஹெச்பிபி & கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் அவைத் தலைவராக உள்ள டாக்டர் விவேக் விஜ், பிரத்யேக ஹெச்பிபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவராக இருப்பார். வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை 2020 அக்டோபர் முதல் இயங்கி வருகிறது.   மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையைச் சென்னை மற்றும் தமிழகம், ஆந்திரம் அண்டை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி நன்மதிப்பைப் பெற்றுள்ளது.  

சென்னை வடபழநி மையம் இதுவரை 45000க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இதயம்,  இதயம்-மார்புக் குழி அறுவை சிகிச்சை,  இதயம் & நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, முடநீக்கியல், தலைக்காயம், விளையாடும் போது ஏற்படும் காயங்களுக்கான மருத்துவம், முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை, நரம்பியல் மருந்து சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, பக்கவாதம் & முடக்குவாத சிகிச்சை, சிறுநீரக மருந்து சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இரைப்பைக் குடல் மருந்து சிகிச்சை, உடல் அகநோக்குக் கருவி சிகிச்சை, இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை, ஈரற்குலை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் நோய் & மகப்பேறுகால சிகிச்சை,  பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை சிகிச்சை, கண் மருத்துவம், சரும சிகிச்சை, தடுப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சிசியு & ஐசியு ஆகியவற்றுடன்  கூடிய 24x7 அவசர & விபத்து சிகிச்சைப் பிரிவுகள் மூலம் தரமான மருத்துவத்தைஅளித்துள்ளது. 

நிகழ்ச்சியில் பங்கேற்று டாக்டர் விவேக் விஜ் கூறுகையில் ‘உலகெங்கும் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒவ்வொரு ஆண்டும் 1500-2000 என்ற கணக்கில் கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.  இவற்றுள் 10% குழந்தைகளுக்கானது. தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியாவில் இந்தியா இப்போது முக்கியமான பிராந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையமாக விளங்குகிறது. 25000க்கும் அதிகமானோர் ஆரோக்கிய கல்லீரலுக்காகக் காத்திருந்தாலும், ஒரு சில ஆயிரம் நோயாளிகளுக்கு மட்டுமே இணக்கமான உடலுறுப்பு கிடைக்கிறது. உடலுறுப்பு தானம் செய்வோர் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதால், பொது மக்களிடையே உடலுறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முழு உறுப்பு பெரும்பாலும் தேவைப்படும் என்றாலும், பகுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆரோக்கியக் கல்லீரலின் 50% மட்டுமே பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் உறுப்பு தானம் தந்தவர்களிடமிருந்தே 80%க்கும் அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன’ என்றார்.  

சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை பிராந்திய இயக்குனர் & எஸ்பியூ தலைவர் டாக்டர் சஞ்சய் பாண்டே பேசுகையில் ‘மிகச் சிறந்த முறையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் எங்கள் மையத்துக்கு நீண்ட பாரம்பரியப் பெருமை உண்டு. தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சென்னையின் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம் மூலம் கல்லீரல் நோயாளிகளுக்குக் குறைந்த செலவில், எளிதில் அணுகத்தக்க, உயர்தர சிகிச்சை வழங்கும் எங்கள் முனைவுகள் தொடரும்’ என்றார்.   

அவர் மேலும் தொடர்கையில் ‘இந்தியா முழுவதும் மேம்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஃபோர்டிஸ் புகழ் பெற்று விளங்குகிறது.  பித்த நீர் மற்றும் குருதிநாளங்களில் ஏற்படும் குறைந்த அளவிலான சிக்கல் விகிதத்துடன் இதுவரை 5000க்கும் அதிகமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளோம்.  இம்மையத்தின் தலைவராக தெற்கு ஆசியாவின் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் விஜ் உள்ளார்.  இவரது ஒட்டு மொத்த அனுபவம் 2500 கல்லீரல் அறுவை சிகிச்சைகளும் அதிகமாகும்.  97% நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை, 100% உறுப்பு தான வெற்றி விகிதம்  மற்றும் வாழும் உறுப்பு தானம் அளித்தவர்களுக்கு உலகிலேயே குறைந்த பித்தநீர் சிக்கல் விகிதம் (<4%) என இவரது சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நவீன, ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கட்டமைப்பு வசதிகளுடன், டாக்டர் விவேக் விஜ் மற்றும் நிபுணர் குழு இணைந்து கல்லீரல் நோயாளிகளின் தேவைகளை நிறைவு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம்’ என்றார்.


வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கீழ்க்காணும் சேவைகளை நோயாளிகள் பெறலாம்:

•    கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து வல்லுனர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள்
•    ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்12 படுக்கைகள் கொண்ட கல்லீரல் ஐசியூ
•    அதி நவீன & மாட்யூலர் அறுவை சிகிச்சை அறைகள்
•    சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை & ஹெச்பிபி  நோயாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்க அனுபவம் மிக்க ஊடு கதிரியியக்க மருத்துவர், நோயியல் வல்லுனர் குழுவுடன் துல்லியமான நோக்குறி அறிதல் சேவைகள்
•    அனுபவமிக்க நிபுணர் குழுவின் வயிற்றறை நோக்கியல் மூலம் கல்லீரல் தான அறுவை சிகிச்சைகளுடன் வழக்கமான திறந்த நிலை அறுவை சிகிச்சைகள் 
•    இரக்கமுடன் நோயாளி பராமரிப்பு
•    அறுவை சிகிச்சைக்கு முந்தைய பணிகள் மற்றும் சட்ட ரீதியான அனுமதிகள் சுலபமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த உதவும் திறமையான உறுப்பு மாற்று ஒருங்கிணைப்புக் குழு
------------------------------------------------------------------------------------------------------------------------------