“டகுள் டாட் காம்”

“டகுள் டாட் காம்”

வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் மேலும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக, தற்போது மனித வாழ்வின் அருமருந்தாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் டகுள் டாட் காம் என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.

வாரந்தோறும் திங்கள் கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்காமல் சிரிப்பு மட்டுமே பிரதானமாக இடம் பெற்றுள்ளது. எவர் மனதையும் புண் படுத்தாது , நகைச்சுவை விருந்து படைப்பதில் பல விருதுகளை பெற்ற சின்ன திரை கலைஞர்களான முல்லை மற்றும் கோதண்டம் இந்த டகுள் டாட் காம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.