பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக்கூடாது

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக்கூடாது
Pazhamozhi Sonna Anubavikkanum New Tamil Comedy program

வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக்கூடாது" என்னும் கலகலப்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று மாணவ, மாணவியரிடையே சில பழமொழிகளை சொல்லி அதற்கு விளக்கம் கேட்கப்படுகிறது. பல பழமொழிகளுக்கு அவரவர்களுக்கு தெரிந்த வகையில் பதில் சொல்வது நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் உள்ளது.யாரோ ஒருவர் சரியான விளக்கத்தை சொல்ல அவரை தொகுப்பாளர் பாராட்டுவதும், கூடியிருக்கும் மாணவர்கள் கைதட்டி கௌரவிப்பதும் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் .

யாரும் சரியான விளக்கம் தராத நிலையில் பல பழமொழிகளுக்கு தொகுப்பாளர் செபாஸ்டியன் சரியான விளக்கத்தை சொல்லும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. அனைத்து தரப்பு நேயர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் உள்ளதால் இந்நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Pazhamozhi Sonna Anubavikkanum New Tamil Comedy program