சிறுமி உள்பட 2 பெண்கள் கடத்தல்... திருப்பதியில் பதுங்கிய முன்னாள் ஆசிரியரை கைதுசெய்த தனிப்படை!

கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி உள்பட 2 பெண்களை கடத்திச்சென்ற முன்னாள் ஆசிரியரை, திருப்பதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர் ஆத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் நடத்தி, வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த புகாரில், மணிமாறன் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி, அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வந்துள்ளார். மேலும், தனது வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு மாலை நேரங்களில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது, மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கடந்த ஜுலை மாதம் கடத்திச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியுடன் குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு தப்பிச்சென்ற மணிமாறன் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது, வீட்டின் உரிமையாளரின் மகளான 19 வயது கல்லூரி மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, கல்லூரி மாணவி மற்றும் சிறுமியை அழைத்துக்கொண்டு மணிமாறன் தப்பியோடினார். இதுதொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.