ஆரோக்கிய வாழ்விற்கு பாதாம்

ஆரோக்கிய வாழ்விற்கு பாதாம்
Interactive session held on benefits of consuming almonds

சென்னை ஒரு பிற்பகலை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்துக்காக பாதாமுடன் கொண்டாடியது

உடற்பயிற்சி நிபுணர் ஜெ. வெங்கடேசன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஹரினி என்.பி. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் குறிப்புக்களை வழங்கினர்.

சென்னை 10 ஜூலை 2017: அல்மோண்ட் போர்டு ஆஃப் கலிபோர்னியா சென்னையில் உள்ள ஜி‌ஆர்‌டி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் ஹரினி என்.பீ., மற்றும் பிரபலமான உடற்பயிற்சி நிபுணர் ஜெ.வெங்கடேசனுடன் இணைந்து தினமும் பாதாம் உட்கொள்ளுவதால் மற்றும் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுவதால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து பேசினர்.

ஒரு 15 நிமிடங்கள் பயிற்சி அமர்வு மூலம், உடற்பயிற்சி நிபுணர் விரைவான மற்றும் எளிமையான உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளையும் தினமும் கையளவு பாதாம் சாப்பிடுதல் போன்ற சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கலாம் என கூறினார். இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளை எடுத்து கூறினார். அவர் பாதாமின் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் பற்றியும் (வைட்டமின் ஈ நிறைந்த நிலையில் இருப்பது), சோர்வு மற்றும் எடை நிர்வாகத்தில் அதன் பங்கு, நீரிழிவு மற்றும் ஆரோக்கியமான இதயத்தினை காப்பதில் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் படி அதன் பங்கு ஆகியவற்றை பற்றி கூறினார்.

“ஒரு அடிப்படை உடற்பயிற்சியை தொடர்ந்து கூடுதலாக, எளிமையான, ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் உங்கள் தினசரி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அனைத்துமே உங்களுக்கு கிடைக்கிறது. இயற்கை உணவுகள் ‘பத்திய உனவுகளை’விட சிறந்தவை என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள் பாதம் இதற்க்கு சரியான பொருத்தமாகும். இது ஒவ்வொரு முறை சுவைக்கும் பொழுதும் இயற்க்கையான அத்தியாவசிய ஊட்டசத்துக்களை வழங்கி ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவுகிறது.

நான் தினமும் என் முழு தினசரி பகுதியை (23 பாதாம் / 30 கிராம்) தினமும் சாப்பிடுகிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என் ஜிம் பையில் ஒரு கையளவு பாதாம் வைத்திருக்கிறேன். உண்மையில், நான் சில நேரங்களில் பழங்களுடன் அவற்றை இணைத்தோ அல்லது மற்ற சிற்றுண்டிகளுடன் அவற்றை சேர்தோ வெரைட்டிக்காக உண்ணுகின்றேன். அவைகள் பல இயற்கை ஆதார சத்துக்கள் மற்றும் தசை மீட்பு உதவி ஆகியவற்றை கொண்டு இருப்பதால் பாதாம் உடற்பயிற்சிக்கு முந்தைய/பிந்தைய சிறந்த சிற்றுண்டியாக உள்ளது”என மேலும் உடற்பயிற்சி நிபுணர் ஜெ. வெங்கடேசன் கூறினார்.

ஊட்டச்சத்து நிபுணர் ஹரினி பாலா கூறுகையில் “குறிப்பாக சிற்றுண்டி நேரத்தில் நாம் வழக்கமாக உண்ணும் இந்த நேரத்திற்கு திட்டமிடாததால், அதிக கார்போஹைட்ரேட், கனமான கலோரி டிலைட்ஸ், ஆகியவற்றை உண்ணுகிறோம். இது நமது எடை அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய உணவின் (காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு) போது எடுத்த ஆரோக்கியமான உணவுகளையும் எதிர்கொள்கிறது. எனவே, ஸ்மார்ட் சிற்றுண்டி முக்கியமானது! உண்மையில், பாதாம் கொண்ட ஸ்மார்ட் சிற்றுண்டி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த வழி.

பல்வேறு சுகாதார நன்மைகளுடன் கூடுதலாக, இந்த கொட்டைகளை எந்த மசாலாக்களுடனும் எளிதாக சேர்க்கலாம். எனவே வீட்டில், வேலை அல்லது பயணத்தின்போது,கையளவு (30 கிராம் / 23 பாதாம்) எடுத்து செல்வதால் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆண்டுமுழுவதும் உண்ண முடியும்.” என்றார்.

எனவே ஒரு வழக்கமான உடற்பயிற்சி திட்டமிடலுடன் ஸ்மார்ட் சிற்றுண்டியாக பாதாமை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள்.

Interactive session held on benefits of consuming almonds