சூரியசக்தியில் இயங்கும் பம்ப்

சூரியசக்தியில் இயங்கும் பம்ப்
Grundfos India launches solar pump

கிரண்ட்ஃபோஸ் இந்தியா ஸ்மார்ட் சோலார்ஸை அறிமுகப்படுத்துகிறது

உள்ளூர் பயன்பாட்டிற்கான ஒரு ‘இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட’ சூரியசக்தி பம்ப்

சென்னை, மே 31, 2017: சிறந்த மின்சார சேமிப்பினை வழங்கும் பம்ப்புகளைத் உற்பத்தி செய்யும் நிறுவனமான கிரண்ட்ஃபோஸ் பம்ப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (கிரண்ட்ஃபோஸ் இந்தியா), உள்ளூர் பயன்பாட்டிற்கான ஸ்மார்ட் சோலார்ஸ் என்ற சூரியசக்தியில் இயங்கும் பம்ப்பினை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் இந்த செல்ஃப்-பிரைமிங் பம்ப் இந்தியாவிலேயே சிந்தித்து உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சோலார்ஸ் என்பது இந்திய நுகர்வோரின் பிரத்யேகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகும்.

இது எடை குறைவானது, எளிதாக நிறுவக்கூடியது மேலும் அது அரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பம்ப்பின் ஈரம் படும் பகுதிகள் யாவும் உணவுப்பொருளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாலிமர்களால் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சோலார்ஸ் தேவையற்ற இயக்கங்களைக் குறைத்தல், தண்ணீர் நிலைக் கட்டுப்பாடுகள் போன்ற புத்திசாலித்தனமான அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த பம்ப் ஒரு 150W 24V BLDC மோட்டாரைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சோலார்ஸ் வீடுகளுக்கும் மற்றும் தரை தளம் மற்றும் அதிகபட்சமாக இரண்டு கூடுதல் தளங்களைக் கொண்ட கட்டிடங்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும், அதேபோல் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் மோசமாக உள்ளதோ அல்லது மின்விநியோகம் சரியாக இல்லையோ அந்த இடங்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும். இது பண்ணைவீடுகள், கடற்கரை வீடுகள், கிராமப்புற மற்றும் நகர்சார்ந்த பகுதிகளுக்கு மிகச்சிறந்ததாகும்.

இது 250W / 36V (திறந்த மின்சுற்று) சூரியஒளி பேனல்களைக் கொண்டு இயங்குகிறது. இதனை சம்ப்பில் இருந்து மேல்நிலை நீர்தொட்டிகளுக்கு மற்றும் பசுமை வீடுகள், புல்தரைகள், தோட்டங்கள், சூரிய ஒளியில் இயங்கும் நீரூற்றுகளுக்கும் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காகவும் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் சோலார்ஸின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கிரண்ட்ஃபோஸ் இந்தியாவின் மேலாண் இயக்குநர் திரு. ரங்கநாதன் என்.கே. அவர்கள், “முற்றிலும் இந்தியாவிலேயே சிந்தித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியில் இயங்கும் புத்திசாலிப் பம்ப்பினை அறிமுகப்படுத்துவதில் கிரண்ட்ஃபோஸ் இந்தியா பெருமைப்படுகிறது. ஸ்மார்ட் சோலார்ஸ் வீட்டு உரிமையாளர்களுக்கான ஒரு நம்பகமான மற்றும் சக்திமிக்க பம்ப் ஆகும். இதை நிறுவுவது எளிதானது, எடை குறைந்தது மேலும் குறைவாக-பராமரிக்க வேண்டிய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளியில் இயங்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இதில் இத்தனை சிறப்பம்சங்களும் இருப்பதால், பல்வேறு பயனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இதுவே சிறந்த தேர்வாக உள்ளது”. என்றார்.

ஸ்மார்ட் சோலார்ஸ் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, அழைக்கவும்: 1800-102-2535

Grundfos India launches solar pump