தீர்க்க சுமங்கலி தொடரின் மூலக்கரு

தீர்க்க சுமங்கலி தொடரின் மூலக்கரு
Dheerka Sumangali Serial Synopsis

வானவில் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தீர்க்க சுமங்கலி தினத்தொடர்.

நடனகாரி மேனகா, சுமனை பணத்துக்காகத்தான் காதலித்தாள் உண்மையாக காதலிக்கவில்லை, என்ற உண்மை சுமனுக்கு தெரிய வர சுமன் அவளை வெறுத்து ஒதுக்குகிறாள். சுமனும் சாந்தாவும் சந்தோஷமாக இருக்க. எப்படியாவது இருவரை பிரிக்க வேண்டும் என்று சுமனின் அம்மா பலதிட்டங்கள் தீட்டுகிறாள்.

சாந்தாவின் அம்மா அனிதா கற்பமாக இருக்க அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்க, தன் அம்மாவும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் உயிரோடு இருக்க வேண்டும் என்று சாந்தா தன் கணவனுடன் சாய்பாபா கோயிலுக்கு சென்று தன் தாயை காப்பாற்றும் படி கடவுளிடம் வேண்டுகிறாள், கடவுள் செவிசாய்த்து அனிதா காப்பாற்றப்படுகிறாள். அனைவருக்கும் சந்தோஷமாக இருக்க டாக்டர் வந்து அனிதாவிடம் வயிற்றில் இருக்கும் குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து அதனால் அபாஷன் செய்துவிடலாம், இந்த தகவலை உன் மாமியர்  ராஜேஸ்வரியிடம் முதலில் சொல்லிவிட்டேன் என்று டாக்டர் கூற அனிதாவுக்கு அதிர்ச்சி தன் மாமியார் ஏன்          என்னிடம் உண்மையை சொல்லவில்லை அவரர்களுக்கு வாரிசுதான் முக்கியம் என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ராஜேஸ்வரி நினைத்துவிட்டாள் என்று அனிதா தனக்குதானே நொந்து கொண்டு டாக்டரிடம் அபாஷன் செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள் .இப்பொழுதுதான் அனிதாவுக்கு ராஜேஸ்வரியின் மறுமுகம் தெரிகிறது. அனிதாவுக்கு அடுத்து அடுத்து என்ன சம்பவங்கள் நடக்கிறது அது என்ன?

ராஜேஸ்வரி வீட்டுக்கு மருமகளாக வந்த ஆர்த்தி இந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும். தன் அக்கா பைத்தியமாக இருக்க காரணம் இந்த குடும்பத்தாள் தான் என்று ஆர்த்தி எப்படி எல்லாம் இந்த குடும்பத்தை சின்னா பின்னமாக்க முடியுமோ அப்படி ஆக்க முயற்ச்சிகள் எடுக்கிறாள் அவள் முயற்ச்சி வெற்றி பெற்றதா?...

Dheerka Sumangali Serial Synopsis