சென்னை அண்ணாசாலையில் மீண்டும் விரிசல்

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் விரிசல்
Crack in Chennai Anna Salai again near Gemini bridge

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையில் பள்ளம் ஏற்பட்டு பேருந்து மற்றும் கார் ஒன்று அதனுள் சிக்கிக்கொண்டது. தற்போது பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை விரிசலால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு மெட்ரோ நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்து வந்தனர், தற்போது மெட்ரோ ரயில் பணியாளர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியாக போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crack in Chennai Anna Salai again near Gemini bridge