தமிழகத்தில் கொரோனா - இன்றைய நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1242, புதிய பாதிப்பு 38
கோயம்பேட்டிற்கு காய்கறி, பழங்கள் வாங்க தனிநபர்கள் வருகை தர வேண்டாம் - கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு
காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாக இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது - கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை
சென்னையில் அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டைக்கான கால அவகாசம் வரும் 3ம் தேதி வரை நீட்டிப்பு - மாநகராட்சி ஆணையர்.