அசோக் லேலேண்ட்டின் புதிய ‘தோஸ்த்+’ அறிமுகம்

அசோக் லேலேண்ட்டின் புதிய ‘தோஸ்த்+’ அறிமுகம்

'Mr. Nitin Seth, President - Light Commercial Vehicles, Ashok Leyland'

சென்னை: அசோக் லேலேண்ட், ஹிந்துஜா  குழுமத்தின் பிரதான வர்த்தக நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளர்களுள் ஒன்றுமான இந்நிறுவனம், எல்சிவி வாகனப்பிரிவில் தனது புதிய ’தோஸ்த்+’ (DOST+) வாகனத்தை சென்னையில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. அசோக் லேலேண்ட், வணிகரீதியாக சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் 'தோஸ்த்' அறிமுகம் மூலம் எல்சிவி  (Light Commercial Vehicle) வாகனப்பிரிவில் களமிறங்கியது. தற்போது ’தோஸ்த்+’-ன் அறிமுகம் மூலம், அசோக் லேலேண்ட் ‘தோஸ்த்’ ப்ராண்ட்டை மேலும் வலுவுடையதாக்கி இருக்கிறது. புதிய ’தோஸ்த்+’ வாகனமானது, 2 டன் முதல் 3.5 டன் வரை மொத்த வாகன எடையுடைய  (Gross Vehicle Weight - GVW) சிறிய வர்த்தக வாகனப் பிரிவில், உயர்வசதிகளுக்கான (upper end) தேவைகளைப் பூர்த்திசெய்யும் நவீன தயாரிப்பாக அமைந்திருக்கிறது. மேலும் இவ்வாகனம் 1.475 டன் எடை தாங்கும் ஆற்றலுடையது. புதிய ’தோஸ்த்+’ -ன் ஆரம்பவிலை 5.54 லட்சமாகும். (எக்ஸ்-ஷோரும், சென்னை)

புதிய ’தோஸ்த்+’ மற்றும் ‘தோஸ்த்’ ஆகிய இரு வாகனங்களும் இணைந்து எல்சிவி வாகனப்பிரிவில் அசோக் லேலேண்ட் நிறுவனத்திற்கு இருக்கும் பெரும் வரவேற்பை பூர்த்திசெய்யும் வகையில் சந்தையில் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி, மையப்படுத்தப்பட்ட சுழற்சி போக்குவரத்து செயல்பாடு மாதிரி (hub & spoke transportation) மீதான அதிக அக்கறை, ஜிஎஸ்டி-யின் செயலாக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை, இ-காமர்ஸ், மற்றும் அதன் தொடர்புடைய தொழில்கள் காரணமாக புதிய ’தோஸ்த்+’ மற்றும் ‘தோஸ்த்’ ஆகிய இரு வாகனங்களும் பெரும் சந்தையைக் கொண்டிருக்கின்றன.

’தோஸ்த்+’ வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சியில் அசோக் லேலேட்ண்டின் நிர்வாக இயக்குநர் திரு. வினோத் கே. தாசரி (Mr. Vinod K. Dasari, Managing Director, Ashok Leyland Ltd.) பேசுகையில் ‘’தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும்  ’தோஸ்த்+’, நமது எல்சிவி வாகன வர்த்தகத்தில் புதிய தளத்தை உருவாக்கும் மிக முக்கியமான தயாரிப்பாக இருக்கும். ’உங்கள் வெற்றி எங்களது வெற்றி’ (‘Aapki Jeet. Hamari Jeet’) என்னும் எங்களது தாரகமந்திரத்தை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வெற்றிக்கான தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறோம். ‘தோஸ்தி’ ப்ராண்ட், எங்களது வாக்குறுதிகளையும், உத்திரவாதத்தையும் வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும்  மிகச்சரியான உதாரணமாக விளங்குகிறது. மேலும் வளர்ச்சிக் கண்டுவரும் இந்த எல்சிவி வாகனப்பிரிவில்  அதிகரித்து வரும் இப்பிராண்டின் சந்தைப் பங்களிப்பின் மூலம் நாங்கள் ஏற்கனவே முத்திரைப் பதித்து இருக்கிறோம்’’ என்றார்.

சென்னையில் ’தோஸ்த்+’ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் எல்சிவி வாகனப் பிரிவின் தலைவர் திரு. நிதின் சேத் (Mr. Nitin Seth, President - Light Commercial Vehicles, Ashok Leyland)  பேசுகையில், ‘’இன்று சந்தையில் 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட  ‘தோஸ்த்’ வாகனங்கள் தங்களது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மேலும் சந்தையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’தோஸ்த்’ ப்ராண்ட், ஏற்கனவே அசோக் லேலேண்ட்டிற்கு பெரும் வெற்றியைப் பெற்று தந்திருக்கிறது. தற்போது  இக்குடும்பத்தில் ’தோஸ்த்+’ சேர்வதால், இந்த அறிமுகம் உயர்வசதி பயன்பாட்டு உடைய எல்சிவி வாகனப் பிரிவில், எங்கள் மீதான நம்பிக்கையையும், ப்ராண்ட்டின் மீதான நம்பகத்தன்மையையும் மேலும் மேலும் அதிகரிப்பதாக அமையும். மிக அசத்தலான அதிக மைலேஜ், அபார பிக் அப், 18% அதிகம் எடைஏற்றும் திறன், 7% அதிகம் எடை ஏற்றும் இடவசதி, 15 அகல் பெரிய டயர்கள் ஆகிய சிறப்பம்சங்கள் ’தோஸ்த்+’ –ன் ஒவ்வொரு சவாரியையும் மதிப்புள்ளதாகவும், லாபத்தை அதிக ஈட்டும் வாய்ப்பளிப்பதாகவும் இருக்கும். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்கால தயாரிப்பாகவும், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவங்களில் இப்பிரிவு வாகனங்களில் அபார ஆற்றலுடனும், இதுவரையில்லாத் எரிப்பொருள் சிக்கனத்துடனும் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்சிவி வாகனப்பிரிவில் எங்கள் மீதான நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் ’தோஸ்த்+’ –ன் அறிமுகம் அமைந்திருக்கிறது. மேலும் ’தோஸ்த்+’ வாகனத்திற்கு நாங்கள் வழங்கும் உத்திரவாத்த்தை இரட்டிப்பாக்கி இருக்கிறோம். இது எங்களது வாகனம் மீது எங்களுக்கு இருக்கும் அபாரமான நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எங்களது ‘தோஸ்த்’-ஐ போலவே ’தோஸ்த்+’ மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் வெற்றியையும், அதிகப் பலன்களையும் பெற்று பலனடைவார்கள் என நம்புகிறோம்’&rsquo