வங்கி சேவை முழுவதுமாக பாதிப்பு

வங்கி சேவை முழுவதுமாக பாதிப்பு

சென்னை: சம்பள உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர், இதனால் கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். 

அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின. அதே நேரத்தில் அனைத்து தனியார் வங்கிகளும் இன்று வழக்கம் போல செயல்பட்டன.

மேலும், நாளை 22-ந் தேதி 4-வது சனிக்கிழமை, நாளை மறுதினம் 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவ்விரு நாட்களும் வங்கி விடுமுறை நாட்கள் ஆகும். 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இடையே 24-ந் தேதி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.

26-ந் தேதி புதன்கிழமையன்று வேலை நிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும்.