லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 6 பேர் பலி

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 6 பேர் பலி
6 killed in 24 storey Grenfell Tower fire accident

லண்டன்: மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

24 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் சுமார் 600 பேர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

6 killed in 24 storey Grenfell Tower fire accident