50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
50 Lakhs worth gold and diamond robbed in Jewellery showroom

டெல்லி: டெல்லி அருகே உள்ள பாண்டவ நகர் பகுதியில் பிரபலமான நகைக்கடையில் நேற்று பிற்பகலில் மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் 50 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:

நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் 4 பேர் என தெரியவந்துள்ளது. காரில் வந்த மர்மநபர்கள் ஒருவர் நகைக்கடையில் வெளியே நின்று உள்ளார். மற்ற நபர்கள் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 Lakhs worth gold and diamond robbed in Jewellery showroom