கணவனை கொடூரமாக கொன்ற மனைவி

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி
Wife brutally killed her husband

பனாஜி: கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தைச் சேர்ந்த பாசுராஜ் பாசு தனது மனைவி கல்பனா பாசு மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பாசுராஜின் நண்பர் ஒருவர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மனைவி, போலீசில் புகார் அளித்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாசுராஜின் மனைவி மற்றும் 2 நண்பர்களுடன் சேர்ந்து பாசுராஜை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கல்பனா மற்றும் பாசுராஜின் நண்பர்கள் மூன்று பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடன் நடத்திய விசாரணையில், பாசுராஜுடன் ஏற்பட்ட சண்டையில் கல்பனா அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதனை மறைக்க பாசுராஜின் நண்பர்களுடன் இணைந்து அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி பையில் போட்டு கர்நாடகா-கோவா எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீசப்பட்டிருந்த உடலை கைப்பற்றினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wife brutally killed her husband