டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 24-வது சதம்

டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 24-வது சதம்

ராஜ்கோட்: இந்தியாவில் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது, இதில் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது, இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கியது அபாரமாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது, அறிமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்களை குவித்தார்.

இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதில், சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராத் கோலி அடிக்கும் 24-வது சதம் இதுவாகும். விராத் கோலி 120 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.