“இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுதல்”

“இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுதல்”
SRM University ICCE 2018

“இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுதல்” பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு 2018 (ICCE 2018)

NIEPMD: பல்வகை திறன் குறைவு உள்ளவர்களை திறன்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD), தேசிய அளவில் தனித் தன்மை வாய்ந்ததாகும். இது இயலாமைகள் பல உள்ளவர்களைத் திறமையானவர்களாக மாற்றுவதற்கு பயிற்சியாளர்களை இந்தியா முழுவதுமட்டுமின்றி பிறநாடுகளிலும் பயிற்றுவிக்கிற நிறுவனமாகும்.

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் (SRMIST): உலகளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் பலதுறைகளிலும் உயர்கல்வியைக் வழங்கும் நிறுவனமாகும். குறிப்பாக அது சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களைத் திறமைஉள்ளவர்களாக மாற்றக்கூடிய வகையில் இயன்முறை மருத்துவம், பேச்சுப் பயிற்சி, ஒலிக் கேட்பியல் பயிற்சி, தொழில்முறை மருத்துவம் முதலிய படிப்புகளை அது நடத்துகிறது. அது ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் பல நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இந்தப் படிப்புகளை அது நடத்துகிறது.

நார்தம்ப்டன் பல்கலைக்கழகம்: தொழில்முறை மருத்துவத்தில் இது உலகளாவிய புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும். பல நாடுகளின் மாணவர்கள் அங்குக் கல்வி பெறுகின்றனர். மேலும் அது உலகம் முழுவதும் படிப்புகளை நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கு சென்னைக்கு அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர், பொத்தேரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் கருத்தரங்காகும். ஏறத்தாழ 600 பேர் பங்கேற்கிறார்கள் 79 அறிஞர்களும் வல்லுநரும் இத்துறையில் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்கிறார்கள். இங்கிலாந்து, கம்போடியா, இலங்கை, அமெரிக்கா, கொலம்பியா, மலேசியா, நேபாளம், பூடான், கனடா ஆகிய நாடுகளிலிருந்து பங்கேற்கிறார்கள். 148 அறிவியல் கட்டுரைகள் வழங்கப்படவிருக்கின்றன.
31.01.2018 மற்றும் 01.02.2018 ஆகிய நாள்களில், திறன் குறைவான குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 30 இந்தியா மற்றும் பிறநாட்டுக் குழுக்கள் பங்கேற்கின்றன. கருத்தரங்குப் பொருண்மை தொடர்பான மலர் வெளியிடப்படுகிறது.

தொடக்கவிழா 30.01.2018 செவ்வாய்க்கிழமை

திருமதி சகுந்தலா D. கேம்லின், இ.ஆ.ப., செயலர், திறன் குறைந்தவர்களை மேம்படுத்தும் துறை(DEPwD) சமூக நீதி அமைச்சகம், இந்திய அரசு
டாக்டர் தா.இரா. பாரிவேந்தர், SRM கல்விக் குழுமங்களின் நிறுவனர் - வேந்தர்.

சிறப்பு விருந்தினர்கள்:

திருமதி டோலி சக்ரபர்த்தி, இணைச் செயலர் DEPWD சமூகநிதி அமைச்சகம் பேரா. சுதேஷ் முகோபாத்யாய், RCI முன்னாள் தலைவர் பேரா. ரிச்சர்டு ரோஸ், நார்த்தம்ப்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து

நிறைவு விழா 02.01.2018 அன்று நடைபெறுகிறது.

SRM University ICCE 2018