பயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு, நிலம் பறிமுதல்: எஸ்.பி.ஐ

பயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு, நிலம் பறிமுதல்: எஸ்.பி.ஐ
SBI notice to Farmers to pay crops loans

திருச்சி: பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவேரி வேளாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து சமரசம் செய்தனர், இதனால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் செய்துள்ளனர், மேலும் வருகிற மே மாதம் 25-ந்தேதிக்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் குழுமணி, மேக்குடி, கோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றிருந்தனர். ஆனால் அவர்களால் இதுவரை கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதையடுத்து கடனை திரும்ப செலுத்தக்கோரி 6 விவசாயிகளுக்கு கோர்ட்டு மூலம் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 16-ந்தேதிக்குள் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

SBI notice to Farmers to pay crops loans